சுவிட்சர்லாந்தில் தற்போதைய மகப்பேறு விடுப்புக் கொள்கைகளுக்குப் பதிலாக,இடதுசாரி மற்றும் மையவாத குழுக்களின் கூட்டணி செவ்வாயன்று ஒரு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது.
தங்கள் குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து தாய் மற்றும் தந்தைக்கு, 36 வாரங்கள் பெற்றோர் விடுப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த முன்முயற்சி செவ்வாயன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.
தொழில்முறை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் சம வாய்ப்புகளை மேம்படுத்துவதே இதன் குறிக்கோள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
பெற்றோரின் பொறுப்பு என்பது பகிரப்பட்ட பொறுப்பு என்பதை வலியுறுத்துகிறது.
தற்போது மகப்பேறு விடுப்பு 14 வாரங்களாகவும், பெற்றோர் விடுப்பு இரண்டு வாரங்களாகவும் உள்ளது.
புதிய முன்முயற்சியானது, பெற்றோருக்கு 18 வாரங்கள் மாற்ற முடியாத விடுமுறையை முன்மொழிகிறது.
உடல்நலக் காரணங்களைத் தவிர, இரண்டு பெற்றோர்களும் ஒரே நேரத்தில் விடுப்பில் கால் பகுதி வரை எடுக்கலாம்.
மூலம்- swissinfo