பெர்னின் Wankdorf நிலையத்துக்கும் Ostermundigenக்கும் இடையிலான ரயில் பாதையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் பெடரல் ரயில்வே அறிவித்துள்ளது.
இதனால்,பயணிகள் தாமதங்களை சந்திக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் Wankdorf நிலையத்துக்கும் Ostermundigenக்கும் இடையிலான ரயில் பாதையில் சேதம் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் SBB அதன் செயல்பாட்டு பக்கத்தில் கட்டுப்பாடுகள் மற்றும் தாமதங்கள் பற்றி எச்சரித்தது.
எனினும், நேற்று இரவு 8 மணிக்குள் இடையூறு நீக்கப்பட்டது.
பெர்ன் மற்றும் துன் இடையிலான பாதையிலேயே சேதம் ஏற்பட்டது.
பல்வேறு இன்டர்சிட்டி மற்றும் யூரோசிட்டி ரயில்கள் இண்டர்லேக்கன், வலாய்ஸ் மற்றும் இத்தாலிக்கு இந்த பாதை வழியாகவே இயக்கப்படுகின்றன.
மூலம்- bluewin