அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சுவிஸ் ஏற்றுமதிகள் மீதான 31% வரிகள் தொடர்பாக சுவிஸ் ஜனாதிபதி கரின் கெல்லர்-சுட்டர் பதிலளித்துள்ளார்.
பெடரல் கவுன்சில் அமெரிக்க வரி முடிவுகளை கவனத்தில் கொள்கிறது என்று அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஃபெடரல் கவுன்சில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவில் தீர்மானிக்கும்.
நாட்டின் நீண்ட கால பொருளாதார நலன்கள் முதன்மையானவை.
“சர்வதேச சட்டத்திற்கு விசுவாசம் மற்றும் சுதந்திர வர்த்தகம் ஆகியவை முக்கிய மதிப்புகளாக இருக்கின்றன” என்றும் கெல்லர்-சுட்டர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்- bluewin