அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய பரஸ்பர வரிகளை அறிவித்துள்ளார்.
இந்த நாள் வரலாற்றில் இடம்பிடிக்கும் என்ற வார்த்தைகளுடன், ட்ரம்ப் சற்று முன்னர், வெள்ளை மாளிகையின் ரோஸ் தோட்டத்தில் புதிய வரிகளை அறிவித்தார்.
அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரிகளை அறிவித்துள்ள ட்ரம்ப், அமெரிக்காவுடன் வர்த்தகப் பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கு அதிக தண்டனை வரிகளை அறிவித்துள்ளார்.
னாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34 சதவீதமும், சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 31 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிக்கு 20 சதவீதமும், தென் கொரியாவுக்கு 25 சதவீதமும், ஜப்பானுக்கு 24 சதவீதமும், தைவானுக்கு 32 சதவீதமும் வரி விதிக்கப்பட உள்ளது.
கம்போடியாவுக்கு 49 வீதமும், வியட்நாமுக்கு 46 வீதமும்,இலங்கைக்கு 44 வீதமும் பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது.
இது இன்று தொடக்கம் அமுலுக்கு வரும்.
புதிய தண்டனை நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான அமெரிக்காவின் தீவிரமான போர் அறிவிப்பு எனக் கருதப்படுகிறது.
மூலம்- bluewin