16.3 C
New York
Wednesday, October 7, 2026

சுவிஸ் சனத்தொகை 9 மில்லியனை தாண்டியது.

சுவிட்சர்லாந்தை நிரந்தர வதிவிடமாக கொண்டவர்களின் சனத்தொகை 2024 இன் இறுதியில் 9,048,900 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது குடியேற்றம் குறைந்துள்ளது, அதே நேரத்தில் குடியகல்வு  அதிகரித்துள்ளது.

- Advertisement -

இருப்பினும், 2023 ஆம் ஆண்டின் இறுதியுடன் ஒப்பிடுகையில், நிரந்தர வதிவிடமாக கொண்ட மக்கள் தொகை 1% அல்லது 86,600 பேர் அதிகரித்துள்ளது என்று அவர் பெடரல் புள்ளியியல் அலுவலகம் (FSO) தெரிவித்துள்ளது.

FSO இன் அறிக்கைப் படி, அனைத்து கன்டோன்களும் மக்கள்தொகை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.

Schaffhausen இல்  1.8% மற்றும் Friborg மற்றும் Valais தலா 1.5% உடன் மிகப்பெரிய அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டது.

மிகச்சிறிய அதிகரிப்புகளாக, டிசினோ மற்றும் அப்பென்செல் அஸ்ஸெர்ஹோடன் கன்டோன்களில் 0.3% மற்றும் ஜூரா கன்டோனில் 0.4% அதிகரித்துள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles