சுவிட்சர்லாந்தை நிரந்தர வதிவிடமாக கொண்டவர்களின் சனத்தொகை 2024 இன் இறுதியில் 9,048,900 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது குடியேற்றம் குறைந்துள்ளது, அதே நேரத்தில் குடியகல்வு அதிகரித்துள்ளது.
இருப்பினும், 2023 ஆம் ஆண்டின் இறுதியுடன் ஒப்பிடுகையில், நிரந்தர வதிவிடமாக கொண்ட மக்கள் தொகை 1% அல்லது 86,600 பேர் அதிகரித்துள்ளது என்று அவர் பெடரல் புள்ளியியல் அலுவலகம் (FSO) தெரிவித்துள்ளது.
FSO இன் அறிக்கைப் படி, அனைத்து கன்டோன்களும் மக்கள்தொகை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.
Schaffhausen இல் 1.8% மற்றும் Friborg மற்றும் Valais தலா 1.5% உடன் மிகப்பெரிய அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டது.
மிகச்சிறிய அதிகரிப்புகளாக, டிசினோ மற்றும் அப்பென்செல் அஸ்ஸெர்ஹோடன் கன்டோன்களில் 0.3% மற்றும் ஜூரா கன்டோனில் 0.4% அதிகரித்துள்ளது.
மூலம்- swissinfo