Niederbipp மற்றும் Oensingen இடையே A1 நெடுஞ்சாலையில் இரண்டு விநியோக வான்கள் உட்பட மூன்று வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தை அடுத்து விநியோக வான் ஒன்று தீப்பற்றி எரிந்தது.
நேற்று பிற்பகல் 3:40 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முந்திச் செல்லும் பாதையில் அடுத்தடுத்து இந்த வாகனங்கள் விபத்துக்குள்ளானதை அடுத்து பொலிஸ் உதவியுடன், வாகனங்கள் அவசர பாதைக்கு மாற்றப்பட்டன.
அப்போது, மாலை 4:20 மணியளவில், விநியோக வான் ஒன்றின் இயந்திரப் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது.
உடனடியாக பொலிசார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும், தீ வேகமாக பரவியது.
இதனால், அந்த வான் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்ததுடன், இரண்டாவது வானில் பின்பகுதியும் தீப்பிடித்து எரிந்தது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ விபத்தின் காரணமாக, சூரிச் நோக்கிய A1 நெடுஞ்சாலை சுமார் 20 நிமிடங்களுக்கு முழுமையாக மூடப்பட வேண்டியதாயிற்று.
பெர்ன் திசையிலும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
மூலம்- 20min

