0.4 C
New York
Wednesday, February 25, 2026

3 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 3 பேர் காயம்.

Pfäffikon  இல் இருந்து  Rapperswil  நோக்கி சென்று கொண்டிருந்த 3 கார்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

47, 24 மற்றும் 53 வயதுகளை உடைய மூவர் அடுத்தடுத்து  தங்கள் கார்களை ஒன்றன் பின் ஒன்றாக ஓட்டிக் கொண்டிருந்தனர்.

திங்கள்கிழமை காலை 6:30 மணியளவில்,  53 வயதுடைய நபரில் கார் 24 வயதுடைய நபரின் காரின் பின்பகுதியில் மோதியது.

அந்த விபத்தினால், 24 வயதுடையவரின் கார், அவருக்கு முன்னால் ஓட்டிச் சென்ற 47 வயதுடையவரின் காரின் பின்பகுதியில் மோதியது.

இதில் சம்பந்தப்பட்ட 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

24 வயதான இளைஞன்  அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மற்றவர்கள் தாங்களாகவே மருத்துவ சிகிச்சையை நாடியுள்ளனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles