27.8 C
New York
Monday, July 14, 2025

சூரிச் கொலை தொடர்பாக இலங்கை இளைஞன் கைது.

ஒரு வாரத்திற்கு முன்னர் சூரிச்சின் Dietikon இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வன்முறை மோதலில் 44 வயது நபர் ஒருவர் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இலங்கை இளைஞன் உள்ளிட்ட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மார்ச் 30ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில், இறந்தவரின் சிறந்த நண்பரும் அதே மேல் மாடி முகவரியில் வசிப்பவருமான 30 வயதுடைய சந்தேக நபர் –  அதே நாளில் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளை அடுத்து, கடந்த வாரம் இலங்கையைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சூரிச் கன்டோனல் காவல்துறை மற்றும் சூரிச் அரசு வழக்கறிஞர் அலுவலகம் ஆகியவற்றின் கூட்டு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் 27 வயதான சுவிஸ் நபர் மற்றும் 34 வயதுடைய துனிசிய நபர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles