22.2 C
New York
Monday, June 22, 2026

கார் மோதி 2 வயதுச் சிறுவன் மரணம்.

Stettenஇல்  நடந்த விபத்தில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் மாலை 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மணிக்கு 30 கிமீ வேகத்தில் பயணம் செய்த ஒரு SUV வாகனம் மோதியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

விபத்தை ஏற்படுத்திய 65 வயதான பெண் சாரதிக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

இந்த விபத்து எப்படி நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என Aargau பொலிசார் தெரிவித்தனர்.

பலர் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் மெழுகுவர்த்திகள், பூக்கள் வைத்து, இறந்த குழந்தைக்கு அனுதாபம் தெரிவித்தனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles