13.2 C
New York
Thursday, October 8, 2026

சூரிச் பேக்கரியில் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது.

சூரிச்சில் உள்ள பேக்கரியில் நேற்று அதிகாலை 1 மணியளவில், கொள்ளை இடம்பெற்றுள்ளது.

அங்கிருந்த 24 வயது ஸ்பானியர் மற்றும் 25 வயது கியூப இளைஞனை பல ஆண்கள் தாக்கி விட்டு  ஒருவரிடமிருந்து பல பொருட்களைத் திருடிக் கொண்டு தப்பி ஓடினர்.

- Advertisement -

இந்தச் சம்பவத்தில் இரண்டு பேருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டன.

பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் இரண்டு நபர்களைக் கண்டுபிடித்தனர்.

18 மற்றும் 19 வயதுடைய இரண்டு ஆப்கானியர்களை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்து,  விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட ஆண்கள் அதே இரவில் இடம்பெற்ற பிற குற்றங்களுக்கும் பொறுப்பானவர்கள் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles