14.6 C
New York
Sunday, September 27, 2026

அமெரிக்கா- ஈரான் பேச்சுக்களில் ஆக்கபூர்வமான முன்னேற்றம்- சுவிஸ் வரவேற்பு.

லூசெர்ன் அருகே உள்ள பர்கன்ஸ்டாக்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ​​அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்ட “ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்தை” சுவிட்சர்லாந்து வரவேற்றுள்ளது.

பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்காக ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டதை “நேர்மறையான நடவடிக்கை” என்று சுவிஸ் குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

இந்த செயல்முறைக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சுவிட்சர்லாந்து விரும்புகிறது என்று சுவிஸ் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் நிக்கோலஸ் பிடோ, தெரிவித்தார்.

“பதற்றத்தைத் தணித்தல், ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கு ராஜதந்திர ரீதியாக தொடர்ந்து பங்களிப்பதே எங்கள் நோக்கம்” என்றும் பிடோ கூறினார்.

தூதுக்குழுக்கள் சந்திக்கும் புர்கன்ஸ்டாக் மலைவாசஸ்தலத்தில், சுவிஸ் ஆயுதப் படைகள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 2,000 பேர் வரையிலான உறுப்பினர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles