கூகுள், பேஸ்புக், யூடியூப் மற்றும் ட்விட்டர் போன்ற முக்கிய தகவல் தொடர்பு தளங்கள் தொடர்பாக திட்டமிடப்பட்ட ஒழுங்குமுறையை காலவரையின்றி ஒத்திவைக்க பெடரல் கவுன்சில் நேற்று தீர்மானித்துள்ளது.
2023 ஏப்ரலில், பெடரல் கவுன்சிலர் அல்பர்ட் ரோஸ்டியின் தலைமையில் சுற்றுச்சூழல், போக்குவரத்து, எரிசக்தி மற்றும் தகவல் தொடர்புத் துறைக்கு பொருத்தமான விதிமுறைகளை உருவாக்கும் குழு நியமிக்கப்பட்டதை அடுத்து, பெடரல் கவுன்சில் இந்த ஒழுங்குமுறையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தது.
புதிய விதிகள் ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் விதிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்.
மார்ச் 2024 மார்ச் இறுதிக்குள் வரையப்பட வேண்டும் எனவும் திட்டமிடப்பட்டது.
இருப்பினும், அதன் பின்னர் இந்த திட்டம் பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மத்திய கவுன்சில் இந்த திட்டத்தைப் பற்றி விவாதித்த போதும் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.
மூலம்- 20min.