Feusisberg இல் வீதியைக் கடந்த மான் மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று அதிகாலை 5.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மான் படுகாயம் அடைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தது.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூலம்- 20min.