Chur இல் Plessur ஆற்றில் தவறி விழுந்து 36 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு 8.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உடனடியாக பொலிசார் மற்றும் மீட்புக் குழுவினர் ஆற்றில் தேடுதல்களை ஆரம்பித்தனர்.
இதனை அடுத்து சுமார் 800 மீற்றர் தொலைவில் பெண் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார்.
அவர் ஆற்றில் விழுந்த சூழ்நிலைகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.
மூலம் – 20min.