பயிலுநர் ஓட்டுநர் ஒருவர் செலுத்திய கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கியது.
நேற்று மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
30 வயதுடைய பயிற்சி ஓட்டுநர் ஒருவர், தனது 34 வயது தோழருடன் லாச்சென் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
சீப்னெனில் உள்ள சுற்றுவட்டத்தில் அவர் வீதியின் வலது பக்கத்தை விட்டு விலகி, Wägitaler Aa மீது உள்ள பாலத்தின் பக்க வேலியில் மோதினார்.
இதனால் கார் பாலத்தின் மீது அந்தரத்தில் தொங்கியது.
அங்கிருந்தவர்கள் அவர்களை காப்பாற்றினர். எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
மூலம்- 20min.