Hunzenschwil இல் ஈஸ்டர் ஞாயிறு காலையில் இரண்டு விபத்துக்களில் 3 பேர் காயம் அடைந்தனர்.
நேற்றுக்காலை 8.40 மணியளவில் A1 ஸ்லிப் வீதியிலிருந்து (N1R) சீட்டல்ஸ்ட்ராஸ்ஸை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு வால்வோ கார், ரூப்பர்ஸ்வில் நோக்கி இடதுபுறம் திரும்ப முயன்ற போது, ரூப்பர்ஸ்வில்லில் இருந்து வந்து கொண்டிருந்த Audi கார் மீது மோதியது.
இந்தச் சம்பவத்தில் இரண்டு கார்களின் சாரதிகளும் காயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதேவேளை நேற்றுக்காலை 9:30 மணியளவில், A1 வெளியேறும் இடத்தில் இதேபோன்ற ஒரு விபத்து நிகழ்ந்தது.
Mercedes கார் பெர்ன் பாதையில் இருந்து சீட்டல்ஸ்ட்ராஸ்ஸே நோக்கி இடதுபுறம் திரும்ப மோட்டார் பாதையை விட்டு வெளியேறிய போது, ஹன்சென்ஷ்வில்லில் இருந்து வந்த மஸ்டா கார் மீது பக்கவாட்டில் மோதியது.
இதில் மஸ்டா ஓட்டுநருக்கு இலேசான காயம் ஏற்பட்டது.
மூலம்- 20min