19.5 C
New York
Monday, September 8, 2025

இ-பைக் விபத்தில் ஒருவர் பலி.

Vaud  கன்டோனில், Les Rasses காட்டுப் பகுதியில், இ-பைக் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

73 வயதான சுவிஸ் நபர், செங்குத்தான சரிவில் விழுந்து விபத்துக்குள்ளானார்.

உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக அவர் விழுந்திக்கலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரில் பார்த்த ஒருவர் முதலுதவி அளித்து அவசர சேவைகளை அழைத்தார்.

இரண்டு பொலிஸ் ரோந்துப் படைகள், போக்குவரத்து நிபுணர்கள் மற்றும் ஒரு ரேகா ஹெலிகொப்டர் உள்ளிட்ட மீட்புப் பிரிவுகள் உடனடி உதவிக்கு விரைந்த போதிலும், அந்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமானார்.

மூலம்- Bluewin

Related Articles

Latest Articles