23.3 C
New York
Thursday, October 8, 2026

வீதியை விட்டு காட்டுக்குள் பறந்து சென்ற டெஸ்லா கார்.

Oberwilerstrasseஇல் டெஸ்லா கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதனை ஓட்டிச் சென்ற இளைஞன் படுகாயம் அடைந்தார்.

நேற்றுமுன்தினம் மாலை 6.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

downhill இல் இருந்து Oberwil நோக்கிச் சென்ற கார், மற்றொரு காரை முந்திச் செல்ல முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, பல மீற்றர்கள் பறந்து சென்று காட்டுப்பகுதிக்குள் மரங்களுடன் மோதியது.

மீட்புக் குழுவினர் விரைந்து சென்று காருக்குள் சிக்கியிருந்த 24 வயது இளைஞனை பலத்த காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles