ஈஸ்டர் திங்கட்கிழமை, பரேட்பிளாட்ஸ் மற்றும் சென்ட்ரல் ஸ்டேஷனில் ஏற்பட்ட ட்ராம்கள் மோதி ஏற்பட்ட விபத்துக்களினால், சூரிச் பொதுப் போக்குவரத்தில் குழப்பம் ஏற்பட்டது.
இந்த விபத்துக்களை அடுத்து, பெருமளவிலான VBZ வழித்தடங்கள் பாதிக்கப்பட்டு, அவற்றை வேறு பாதைக்கு திருப்பி விட வேண்டியிருந்தது.
சூரிச் HB மற்றும் சென்ட்ரல்/பெல்லூவ் இடையேயான 2, 3, 4, 6, 7, 8, 9, 10 மற்றும் 11 வழித்தடங்களில் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டன.
இந்த விபத்துக்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் ட்ராம்கள் சேதமடைந்தன.
மூலம்- 20min.