சுவிட்சர்லாந்தின் பெடரல் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அலுவலகம் கார் ஒன்றில் இருந்து 30 கிலோ கொகைனை கைப்பற்றியுள்ளது.
அந்த காரில் பயணம் செய்த 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி இந்த கைது இடம்பெற்றுள்ளதாக டிசினோ கன்டோனல் சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் காருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo