திருத்தந்தை பிரான்சிசின் இறுதிச்சடங்கில் சுவிஸ் ஜனாதிபதி கரின் கெல்லர் சுட்டர் பங்கேற்கவுள்ளார்.
இதுபற்றி அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
திருத்தந்தையின் இறுதிச்சடங்கில் சுவிட்சர்லாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தாம் பங்கேற்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
திருத்தந்தையின் இறுதிச்சடங்கு வரும் சனிக்கிழமை காலை 10 மணியளவில், சென் பீற்றர்ஸ் பசிலிக்காவில் இடம்பெறும் என வத்திக்கான் அறிவித்துள்ளது.
மூலம்- swissinfo

