சூரிச்சில் உள்ள Schlieren இல் கட்டுமானத் தளம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 28 வயதான இளைஞன் ஒருவர் மரணமானார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த நபர் கட்டுமான தளத்தில் சக ஊழியர்களுடன் வேலைகளைச் செய்து கொண்டிருந்த போது, கிரேனுடன் இணைக்கப்பட்ட பகுதி தளர்ந்ததில்,
கட்டுமானத் தொழிலாளி படுகாயம் காயமடைந்து சம்பவ இடத்திலேயே மரணமானார்.
சம்பவம் இடம்பெற்ற சூழல் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மூலம்- swissinfo