குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட “142” என்ற அவசர இலக்கத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் பிற்போடப்பட்டுள்ளது.
2025 நவம்பலில் இந்த திட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டது.
எனினும், 2026 மே மாதம் வரை இந்த திட்டம் செயற்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறியீட்டை செயல்படுத்துவதற்குத் தேவையான சட்ட கட்டமைப்பை உருவாக்குவதும், திட்டத்தின் அதிகரித்த தொழில்நுட்ப சிக்கலான தன்மையும் ஆறு மாத தாமதத்திற்கு வழிவகுத்துள்ளதாக என்று மத்திய தகவல் தொடர்பு அலுவலகம் அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் குறைந்தது 14 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் வீட்டு வன்முறை அதிகரித்து வருகிறது.
2024 ஆம் ஆண்டில் 6.1% வீட்டு வன்முறை அதிகரித்துள்ளது என்று மத்திய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.