திருத்தந்தை பிரான்சிஸ் மரணத்துக்கான காரணத்தை வத்திக்கான் அறிவித்துள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் பக்கவாதத்தாலும் அதைத் தொடர்ந்து மீளமுடியாத இதய செயலிழப்பு காரணமாகவும் மரணமானார் என்று வத்திக்கான் நேற்று நள்ளிரவுக்கு முன்னர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து விரைவில் மேலதிகள விபரங்களை வெளியிடப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் நேற்றுக்காலை 7.35 மணியளவில் காலமானார் என்று அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, நேற்று முன்தினம் வத்திக்கானில் சென் பீற்றர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்தவர்கள் முன் தோன்றிய திருத்தந்தை பிரான்சிஸ், ஈஸ்டர் ஞாயிறு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.
அத்துடன் அன்றைய தினம் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்சையும் அவர் சந்தித்திருந்தார்.

