ரயில் மோதியதில் சிறுமி ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை மாலை, மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
11 வயது சிறுமி ஒருவர் தனது சைக்கிளுடன், ஓபரன்ட்ஃபெல்டன் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஆராவிலிருந்து ஓபரன்ட்ஃபெல்டன் நோக்கி பயணித்த AVA ரயில் உர்கென்வெக் மற்றும் ஆரௌர்ஸ்ட்ராஸ் சந்திப்பில்,மோதியுள்ளது.
சிறுமி தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த போது, ரயிலில் நேருக்கு நேர் மோதியுள்ளார்.
காயமடைந்த அவர், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.