பர்க்டோர்ஃபில் உள்ள ஒரு வீட்டில் செவ்வாய்க்கிழமை மாலை, நுழைந்த அடையாளம் தெரியாத ஒருவர், துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்றார்.
வீட்டு உரிமையாளரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய போதும், அவர் எதையும் எடுக்காமல் தப்பி ஓடிவிட்டதாக பெர்ன் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
அடையாளம் தெரியாத அந்தக் குற்றவாளி வீட்டு வாசலில் உரிமையாளரை அணுகி பணம் கேட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் இணங்க மறுத்ததால், குற்றம்சாட்டப்பட்டவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
சிறிது நேர வாக்குவாதத்திற்குப் பிறகு, குற்றவாளி எதையும் எடுக்காமல் தப்பிச் சென்றுள்ளார்.
குற்றம் நடந்த நேரத்தில் அவர் முகத்தை மூடியிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்-20min

