ஹெர்லிபெர்க்கில் உள்ள சீஸ்ட்ராஸ்ஸில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.
25 வயது ஓட்டுநர் ஒருவர் எதிர் பாதையில் குறுக்கே சென்று மற்றொரு வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
நேற்று இரவு 10.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும், மேலும் இரண்டு பயணிகளும் காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்; சீஸ்ட்ராஸ் பகுதி பல மணி நேரம் மூடப்பட்டிருந்தது.
மூலம்-20min

