சூரிச்சின் ஹெர்லிபெர்க்கில் இரண்டு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.
25 வயது நபர் ஒருவர் ஓட்டிச் சென்ற கார், எதிரே வந்த பாதையில் குறுக்காகச் சென்று, மூன்று பேருடன் எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது.
வெள்ளிக்கிழமை இரவு 10:45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இதில், எதிரே வந்த வாகனத்தின் 45 வயது ஓட்டுநர் படுகாயமடைந்தார்.
மேலும் அவரது இரண்டு பயணிகள் சிறியளவில் காயமடைந்தனர்.
மெய்லன் நோக்கிச் சென்ற காரின் ஓட்டுநருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.
காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்திலேயே ஆரம்ப மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து காரணமாக, இரவு 11:45 மணி வரை அனைத்து போக்குவரத்துகளும் மூடப்பட்டன.
மூலம்- bluewin

