பேர்ன் மற்றும் வாலைஸ் கன்டோன்கள் இடையே உள்ள மலை முகடுகளில் ஒன்றான பீட்டர்ஸ்கிராட்டில் நடந்த ஹெலிகொப்டர் விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து ஏப்ரல் 10 ஆம் திகதி நிகழ்ந்ததாக சுவிஸ் பாதுகாப்பு புலனாய்வு சேவை (SESE) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
பெல் 505 ஜெட் ரேஞ்சர் ஹெலிகொப்டர், பேர்ன் விமான நிலையத்திலிருந்து காலையில் இரண்டு பணியாளர்கள் மற்றும் ஒரு பயணியுடன் பயிற்சிக்காக புறப்பட்டது.
பனிப்பாறையில் தரையிறங்கும் போது, ஹெலிகொப்டர் வலது பக்கத்தில் கவிழ்ந்தது.
இந்தச் சம்பவத்தில் பணியாளர்களில் ஒருவரும், பயணியும் காயம் அடைந்தனர்.
ஹெலிகொப்டர் மோசமாக சேதமடைந்தது. 8 ஆண்டுகளில் இடம்பெற்ற கடுமையான விபத்து இதுவாகும்.
2017 ஆம் ஆண்டில், குறித்த இடத்தில் தரையிறங்கும் போது ஒரு ஹெலிகொப்டர் கவிழ்ந்த விபத்தில், விமானி உயிரிழந்தார்.
மூன்று பயணிகள் இலேசான காயமடைந்தனர், மேலும் இரண்டு பேர் காயமின்றி தப்பினர்.
மூலம்- swissinfo

