Dietikonஇல், வெள்ளிக்கிழமை காலை இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில், இரண்டு பேர் படுகாயமடைந்தனர். பெண் பயணி ஒருவர் சிறிய காயமடைந்தார்.
நேற்றுக்காலை 7.15 மணியளவில், Zürcherstrasse/Bernstrasse junction யில் இந்த விபத்து இடம்பெற்றது.
இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த இரண்டு வாகனங்களின் சாரதிகளும், 46 மற்றும் 58 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மூலம்- 20min.

