காஷ்மீர் பகுதியில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரை சுவிஸ் சர்வதேச விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வெளியைத் தவிர்க்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆசியாவிற்கான சில விமானப் பயணங்களின் நேரங்கள் அதிகரிக்கும்.
இந்த நடவடிக்கை லுஃப்தான்சா குழும நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
புதுடில்லி, சிங்கப்பூர் மற்றும் பாங்கொக்கிற்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக SWISS பேச்சாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக பயணிகள் தங்கள் இணைப்பு விமானங்களைத் தவறவிட்டால், அவர்கள் இலவசமாக மற்றொரு விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நடவடிக்கை எதிர்பார்க்கப்படும் காலம் குறித்து நிறுவனம் எந்த தகவலையும் வழங்கவில்லை.
ஆனால் அப்பகுதியில் ஏற்படும் முன்னேற்றங்களை அது உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக உறுதியளித்தது.
பாதுகாப்பு எப்போதும் முதன்மையானது என்று SWISS தெரிவித்துள்ளது.
மூலம்- swissinfo