18.5 C
New York
Friday, May 15, 2026

பேருந்துக்காக காத்திருந்த கூட்டத்துக்குள் புகுந்த கார்.

ஜெர்மனியின் Stuttgart நகரில், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மக்கள்  கூட்டத்துக்குள் கார் ஒன்று புகுந்த சம்பவத்தில், 46 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் 5.50 மணியளவில்  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் 8 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் 5 பேர் சிறுவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதுடைய ஜெர்மனியரே அவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவரவில்லை. எனினும் இது விபத்து தான் என்றும் பொலிசார் கூறியுள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles