வெளிநாட்டவர்கள் சட்டத்தின் கீழ்,நிர்வாகத் தடுப்பு மையத்தில் நாடுகடத்தலுக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 62 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்த நபர் அவரது அறையில் மரணமான நிலையில் காணப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரைக் காப்பாற்றும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்றும், கூறப்பட்டுள்ளது.
வின்டர்தர்/அன்டர்லேண்ட் சட்டமா அதிபர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
எனினும், இந்த மரணத்தில் வெளிப்புற தலையீட்டிற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மூலம்- 20min.