பெர்ன் கன்டோனில், Mürren க்கு தென்கிழக்கே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சூரிச்சில் உள்ள சுவிஸ் நில அதிர்வு சேவை அறிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக இருந்தது.
இந்த நிலநடுக்கம் மையப்பகுதிக்கு அருகில் தெளிவாக உணரப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அளவிலான நிலநடுக்கத்தால் பொதுவாக சேதம் எதிர்பார்க்கப்படுவதில்லை.
மூலம்- 20min.