சென் காலன் கன்டோனில், Lerchenfeld ice rink இல் நடன விருந்தில் மயங்கிக் கிடந்த ஒருவர் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவசரகால பணியாளர்கள், கட்டடத்தின் வடகிழக்கு மூலையில் 38 வயதுடைய ஒருவரை மயங்கிய நிலையில் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த நபருக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பது தற்போது வரை தெரியவில்லை.
மூலம்- 20min.