இஸ்ரேலிய நகரமான டெல் அவிவ் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் மே 11 ஆம் திகதி வரை சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம் (SWISS) ரத்து செய்துள்ளது.
ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை டெல் அவிவ் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் வீழ்ந்து வெடித்ததை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் எட்டு பேர் காயமடைந்தனர். ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.
மூலம்- swissinfo

