25.6 C
New York
Saturday, July 4, 2026

லூசெர்ன் ஏரியை நீந்திக் கடந்த ஓநாய்.

லூசெர்ன் ஏரியின் குறுக்கே 1.5 கிலோமீட்டரை ஒரு ஓநாய் நீந்திக் கடந்து சென்றுள்ளது. சுவிட்சர்லாந்தில் இவ்வாறு நீந்திய முதல் விலங்கு என்ற பெருமையை அது பெற்றுள்ளது.

பிப்ரவரி 13 ஆம் திகதி 90 நிமிட நேரத்திற்குள் ஓநாய் ஏரியைக் கடந்துள்ளது.

“முதலில், அந்த விலங்கு ஏரியைச் சுற்றி நடந்ததா என்று காட்சிகளைத் தேடினேன்,அந்தக் காலகட்டத்தில் ஏரியின் முழுமையாக சுற்றி வருவதற்கு சாத்தியமில்லை. என்று கோரா கார்னிவோர் சூழலியல் மற்றும் வனவிலங்கு மேலாண்மை அறக்கட்டளையின் உயிரியலாளர் ஃப்ளூரின் குன்ஸ் கூறினார்.

இதனால் ஓநாய் மத்திய சுவிட்சர்லாந்தில் உள்ள ஏரியை ஐந்து டிகிரி செல்சியஸ் நீரில் நீந்தியிருக்க வேண்டும் என்பதே ஒரே வாய்ப்பாகும்.

“ஆனால் இது அவ்வளவு அசாதாரணமானது அல்ல. கோட்பாட்டளவில், நாய்கள் இந்தளவு தூரம் நீந்துவதும் சாத்தியமாகும்,” என்று குன்ஸ் மேலும் கூறினார்.

கடந்த அக்டோபர் முதல், M637 என பெயரிடப்பட்ட இந்த விலங்கில் ஒரு டிரான்ஸ்மிட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சியாளர்கள் ஏரியின் குறுக்கே நீந்துவதை மட்டுமல்லாமல் பல நூறு கிலோமீட்டர்கள் அதன் இடம்பெயர்வையும் கண்காணிக்க அனுமதிக்கிறது.

மூன்று முதல் நான்கு வயதுடைய ஆண் ஓநாய், மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரா மலைகளிலிருந்து, எம்மென்டல் பகுதி வழியாக, ஜுக் மாகாணத்திற்கு ஓடியது. வழியில், அது நெடுஞ்சாலைகளைக் கடந்து, குடியிருப்புகளைச் சுற்றிச் சென்றது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles