15.9 C
New York
Friday, October 9, 2026

35 சபைகளில் ஆட்சியைப் பிடித்த தமிழரசு

உள்ளூராட்சித் தேர்தலில் 257 உள்ளூராட்சி சபைகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

எவ்வாறாயினும், அக்கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப்பெரும்பான்மை 126 சபைகளில் மாத்திரமே கிடைத்துள்ளது.

- Advertisement -

ஏனைய சபைகளில் ஆட்சியமைப்பதற்கு மற்றைய கட்சிகளின் உதவியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் தேசிய மக்கள் சக்தி காணப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி 14 சபைகளிலும், இலங்கை தமிழரசுக் கட்சி 35 சபைகளிலும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 6 சபைகளிலும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 3 சபைகளிலும், ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன.

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட உறுப்பினர்களை விடவும் அதிகளவான உறுப்பினர்களை எதிர்க்கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ளன.

இறுதியான தேர்தல் முடிவு

தேசிய மக்கள் சக்தி (NPP) – 43.3 வீதமான வாக்குகள் – 3,841 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 21.6 சதவீத வாக்குகள் – 1,727 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 9.1 சதவீத வாக்குகள் – 726 உறுப்பினர்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 4.6 சதவீத வாக்குகள் – 371 உறுப்பினர்கள்

பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) – 3.6 சதவீத வாக்குகள் – 292 உறுப்பினர்கள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 2.8 சதவீத வாக்குகள் – 364 உறுப்பினர்கள்

சர்வஜன அதிகாரம் (SB) – 2.8 சதவீத வாக்குகள் – 264 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 1.3 சதவீத வாக்குகள் – 114 உறுப்பினர்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 0.8 சதவீத வாக்குகள் – 105 உறுப்பினர்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) – 0.7 சதவீத வாக்குகள் – 60 உறுப்பினர்கள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) – 0.6 சதவீத வாக்குகள் – 54 உறுப்பினர்கள்

Related Articles

Latest Articles