சுவிட்சர்லாந்தில் இளைஞர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான நகரமாக பெர்ன் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
குறைந்தளவு குற்ற வீதம் மற்றும் அதிக வாழ்க்கைத் தரம் என்பனவற்றால் பெர்ன் நகரம் அவர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
இரண்டாவது இடத்தில் உள்ள சூரிச், அதிக சம்பளத்தை வழங்குகின்ற போதும், அதிக வாழ்க்கைச் செலவும் ஏற்படுகிறது.
பெர்னின் பரந்த அளவிலான கலாசார சலுகைகளைப் பாராட்டும் இளைஞர்கள், பெர்னின் அதிக வாடகையை விமர்சிக்கிறார்கள்.
இந்தப் பட்டியலில் Lausanne மூன்றாவது இடத்தில் உள்ளது.
மூலம்- 20min