சூரிச் உணவுத் திருவிழாவில், சுவிட்சர்லாந்தின் மிக நீளமான உணவு மேசையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
மே 24ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த திருவிழாவிற்கான மிக நீண்ட உணவு மேசை, ஏரி நடைபாதையில் Bellevue மற்றும் Zürchhorn இடையில் அமைக்கப்படவுள்ளது.
மாவட்டத்திற்கு 100 மீற்றர் என்ற அடிப்படையில், அமைக்கப்படவுள்ள, 1.2 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த மேசையில் 84 உணவகங்கள் தங்கள் உணவுகளை வழங்கவுள்ளன.
ஒரே நேரத்தில் சுமார் 4,500 பேர் இந்த நீண்ட மேசையில் அமர முடியும்.
இந்த உணவுத் திருவிழாவில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min