புதிய திருத்தந்தையாக, அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் ரொபேர்ட் பிரீவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்றுக்காலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் திருத்தந்தையை தெரிவு செய்வதற்கு போதுமான ஆதரவு கிடைக்காத நிலையில் புகைபோக்கியில் கரும்புகை வெளிவந்தது.
எனினும் நேற்று மாலையில், வெண்புகை வெளியானதை அடுத்து, சென் பீற்றர்ஸ் சதுக்கத்தில் குழுமியிருந்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதையடுத்து புதிய திருத்தந்தையாக, கர்தினால் ரொபேர்ட் பிரீவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
திருத்தந்தையாக தெரிவு செய்யப்பட்டுள்ள முதல் அமெரிக்கர் இவராவர்.
267 ஆவது திருத்தந்தையாக தெரிவு செய்யப்பட்டுள்ள கர்தினால் ரொபேர்ட் பிரீவோஸ்ட் பாப்பரசர் 14 ஆம் லியோ என அழைக்கப்படுவார்.
அவர் சென் பீற்றர்ஸ் சதுக்கத்தில் குழுமியிருந்த மக்கள் முன் தோன்றி ஆசீர்வதித்தார்.
மூலம்- 20min