Fribourg கன்டோனில் ஏழு போலி பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பத்து நாட்களுக்குள், இடம்பெற்ற 14 மோசடி சம்பவங்களை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
73 முதல் 95 வயதுக்குட்பட்ட முதியவர்களை இலக்கு வைத்து இவர்கள் மோசடிகளில் ஈடுபட்டனர்.
பொலிஸ் அதிகாரிகள் அல்லது தொழில்நுட்ப வல்லுநர்களாகக் காட்டிக் கொண்டு, அவர்கள் இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பெறுமதியான நகைகள் பணம் என்பன இவர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது.
பத்தாயிரக்கணக்கான பிராங் மோசடிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min