நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற பஸ் ஒன்றே இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், 25 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் இரண்டு சிறுவர்கள் அடங்குவதாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.