சுவிட்சர்லாந்தில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடையை ஆதரிப்பதாக, சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் பங்கேற்ற சுமார் 80% பேர் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட Sotomo ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி, பாடசாலைகளில் மொபைல் போன்களைத் தடை செய்வதற்கான ஆதரவு கிட்டத்தட்ட அதேளவுக்கு உள்ளது.
குழந்தைகளை இணையத்தில் இருந்து பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகள் தேவை என்று இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், இணையத்தில் உள்ள பாதுகாப்பு அபாயங்கள் குறித்து குழந்தைகளுக்கு போதுமான அளவு தகவல் இல்லை என்று 85% பேர் நம்புகின்றனர்.
கணக்கெடுக்கப்பட்ட சிறார்களின் பெற்றோர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் குழந்தைகளை போதுமானளவு பாதுகாக்க முடியவில்லை என்று கூறினர்.
மொத்தத்தில், பதிலளித்தவர்களில் 43% பேர் சைபர்புல்லிங் குறித்து கவலை கொண்டுள்ளனர்.
சைபர்க்ரூமிங் – பாலியல் நோக்கங்களுக்காக குழந்தைகளை இலக்காகக் கொண்ட கையாளுதல் (40%) – மற்றும் பாலியல் உள்ளடக்கத்துடன் தொடர்பு கொள்வது (37%) ஆகியவையும் ஆபத்துகளாகக் கருதப்படுகின்றன.
பதிலளித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான இணைய பயன்பாடு ஒரு பெரிய சவாலாகும் என கூறியுள்ளனர்.
சோட்டோமோவின் சைபர் வொரி மொனிட்டருக்காக பிப்ரவரி 26 முதல் மார்ச் 10 வரை இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஜெர்மன் மொழி பேசும் மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுமார் 1,700 பெரியவர்கள் இதில் பங்கேற்றனர்.
மூலம்- swissinfo

