20.1 C
New York
Wednesday, July 8, 2026

ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல் – மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம், எண்ணெய் விலை உயர்வு.

ஹோர்முஸ் நீரிணையில் மூன்று வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரானே பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியிருந்த நிலையில், ஈரான் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

இத்தாக்குதல்களினால் மூன்று கப்பல்களும் சேதமடைந்துள்ள போதிலும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. 

இதேவேளை, ஈரானுக்கு வழங்கப்பட்டிருந்த எண்ணெய் ஏற்றுமதி தடைகளுக்கான விலக்கையும் அமெரிக்கா ரத்து செய்துள்ளது. 

கப்பல்கள் மீதான இத்தாக்குதல்களைக் கண்டித்துள்ள கட்டார் மற்றும் சவூதி அரேபியா, தங்களுக்குச் சொந்தமான கப்பல்களும் சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 

ஈரான் மீதான புதிய தாக்குதல்களை அடுத்து மத்திய கிழக்கில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles