மண்சரிவு காரணமாக, Gunten மற்றும் Merligen ஆகிய பெர்னீஸ் நகராட்சிகளுக்கு இடையேயான கன்டோனல் வீதி 221 மூடப்பட்டுள்ளது.
நிலச்சரிவை அடுத்து, வீதி சேற்றில் மூழ்கியுள்ளதால், அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்தில் தடைகளை அகற்றும் பணியில் இறங்கியுள்ளனர்.
மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து தடை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
சில மணிநேரங்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் நிலச்சரிவு இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- bluewin