Augst இல் A2 மோட்டார் பாதையில் சென்று கொண்டிருந்த ஜீப் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியது.
நேற்று முற்பகல் 11.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
பெண் ஒருவர் ஜீப்பை ஓட்டிச் சென்ற போது திடீரென தீவிபத்து ஏற்பட்ட போதும் அவர் எந்தப் பாதிப்பும் இன்றி தப்பியுள்ளார்.
தொழில்நுட்ப கோளாறினால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் Baselland பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்- 20min