22.8 C
New York
Tuesday, September 9, 2025

கடன்களை மீள செலுத்துவதை 2028ம் ஆண்டுவரை இடைநிறுத்த தீர்மானம்

இலங்கை தமது அனைத்து கடன்களை மீள செலுத்துவதை 2028ம் ஆண்டுவரை இடைநிறுத்துவது குறித்த இறுதிபேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் ஈடுபட்டுள்ளதாக நிக்கேய் ஏசியா தெளிவுபடுத்தியுள்ளது .

சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை தடுப்பதற்காக ஜப்பான் உட்பட நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக நிக்கேய் ஏசியா தெரிவித்துள்ளது.

மற்றும் , கடன்வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டன அடுத்த சில வாரங்களில் முழுமையான அறிவிப்பு வெளியாகும் என இலங்கையின் தேசிய பாதுகாப்பு விடயங்களிற்கான ஆலோசகர் சாகலரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் , இலங்கை கடன்களை 15 வருடங்களிற்குள் மீள செலுத்தவேண்டியிருக்கும் 2028 முதல் 2043ம் ஆண்டிக்குள் என தெரிவித்துள்ள அவர் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் கடன்கள் குறைக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles