டோட்டிங்கனுக்கு அருகிலுள்ள ஆரேட்டல்ஸ்ட்ராஸ்ஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
நேற்று பிற்பகல், மாலை 4 மணியளவில், இந்த விபத்து ஏற்பட்டது.
டோட்டிங்கனை நோக்கிச் சென்ற ஒரு VW கோல்ஃப் கார், எதிரே வந்த மெர்சிடிஸ் கார் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.
வாகனத்திற்குள் அமர்ந்திருந்த ஒரு பெண் பலத்த காயமடைந்து இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார்.
தீயணைப்புத் துறையினர் அவரை வாகனத்திலிருந்து மீட்டனர்.
VW கோல்ஃப் ஓட்டுநருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
அவசர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, அந்தப் பெண் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதே நேரத்தில் காயமடைந்த நபர் அம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய ஆர்காவ் கன்டோனல் பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மூலம்- 20min.